Wednesday, 14 September 2016

தமிழ்ச் சங்கம்

மைசூர் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர்.
கு.புகழேந்தி.
94480 54831.
94489 05831.
0821 2343426.
பெங்களூர் தமிழ்ச் சங்கம்.
லேண்ட் லைன் - 080 25510062.
தலைவர், கோ.தாமோதரன் - 98450 33166.
தி.கோ.தாமோதரன் - 94494 85903.
சிக்கமகளூர் தமிழ்ச்சங்கம்.
தலைவர், ஆறுமுகம் - 90364 74224.
துணைத் தலைவர், குமார் - 99643 58993.
ஹாசன் தமிழ்ச் சங்கம்.
தேவசேனாதிபதி - 94488 45681.
அனூர் தமிழ்ச் சங்கம்.
தலைவர், அரசப்பன் - 99720 42935.
கொள்ளேகால் தமிழ்ச் சங்கம்.
நல்லசாமி - 98869 18029.
சதாசிவம் - 97319 35325.
கந்தசாமி - 96636 77655.
குண்டல் பேட்டைத் தமிழ்ச் சங்கம்.
வீ.பாலகிருஷ்ணன் - 94801 69132.
கண்ணன்.[வேலுச்சாமி] 94491 77151.
சாமராஜ நகர் தாலுக்கா தமிழ்ச்சங்கம்.
சின்னசாமி - 94485 95956.
ஜெகதீஷ் - 94491 61772.
ஆனந்த் - 90363 94238
தங்கவேல்- 94488 71818
உன்சூர் தமிழ்ச் சங்கம்.
சின்னசாமி - 99450 46727.
வேலு - 96204 84120.
முருகன் - 94487 37069.
மணி- 94499 93229.
ஹெக்கட தேவன கோட்டை (ஹெச்டி கோட்) தமிழ்ச் சங்கம்.
நகுல்சாமி - 94495 32255.
தேவராஜன் - 94490 02205.
பழனிச்சாமி - 97410 63117.
பெரியசாமி - 99863 30781.
நஞ்சன்கூடு தமிழ்ச் சங்கம்.
தலைவர், சீனிவாசன் - 81055 17263.

Saturday, 30 July 2016

தமிழ் மொழி



தமிழ் மொழி ஒரு தந்திர மொழி பாகம்- 3
தமிழ் மொழி மூன்று வகையாக உள்ளது
அவை முறையே

🌲இயல் தமிழ்
🌲இசை தமிழ்
🌲கூத்து தமிழ்(நாடக தமிழ்)

இந்த மூன்று தமிழ் அறியாமல் படிக்காமல் யாரும் சித்தராக முடியாது

🌻இந்த மூன்று தமிழை கற்றால் மனிதனை பற்றியும் இறைவனை பற்றியும் எளிதாக அறியமுடியும்

எல்லா சித்தர்களும் ஏன் தென்னாட்டுக்கு வந்து தமிழ் கற்றனர் என ஆராய்க

தமிழ் மொழி உயிர்மொழி அந்த உயிரை வளர்க்க தமிழ் மிகவும் பயன்பட்டது

அதாவது அறிவு நிலையாக இயல் தமிழ் அமைந்துள்ளது,உணர்ச்சி நிலையே இசை தமிழாக உள்ளது,இவ்விரு நிலையில் இருந்து இயக்க நிலையாக கூத்து(நாடக) தமிழ் உள்ளது.

அதாவது

🌲ஞான சக்தி
🌲இச்சா சக்தி
🌲கிரியா சக்தி

இந்த மூன்று சக்திகளையே வாலை, அன்னையாக இருந்து நம்மை செயல்பட தூண்டுகிறாள்.

நீங்கள் ஆன்மீகத்தில் உயர்ஞான பெறவேண்டுமானால் தமிழ் மொழி அறிந்திருக்கவேண்டும்.

அதாவது மூன்று தமிழையும் நீங்கள் கற்றிருந்தால் உங்களால் பஞ்சபூதத்தை ஆளமுடியும். பிற உயிரை அழிக்கவோ ஆக்கவோ முடியும். உங்கள் உயிரை இறக்காமல் முக்தி பேறு செல்லமுடியும்.

தமிழ் மொழி அறிந்தால் நீங்கள் சாபம் கொடுத்தால் உடனே அது பலிக்கும்.

பச்சை மரத்தை எறியவைக்க முடியும்
சூரியனை தடுத்து நிறுத்த முடியும். கிரக கதிர்வீச்சை தடை செய்ய முடியும்.
அந்த காலத்தில் அரசர்கள் முனிவரின் சாபத்திற்க்கு மட்டும் அல்ல புலவர்களின் சாபத்திற்க்கும் பயம் கொண்டனர். காரணம் புலவர்கள் தமிழ்மொழி நுணுக்கமாக அறிந்துள்ளதால்.

🌻தமிழ்மொழியில் இலக்கணம், இசையில் இந்த இரண்டில் தான் மிகுந்த சூட்சமம் உள்ளது மூன்றாவதாக உள்ள கூத்து தமிழ் அழிக்கும் வேலை செய்யகூடியது அதற்கு மேற்கண்ட இரண்டும் துணை செய்கிறது.
சங்கத்தமிழ் மூன்றும்..... தா
    ---------அவ்வையார்
முத்தமிழ் அறிந்த முருகபெருமானே
             -------நக்கீரர்
முத்தமிழே கற்று இயங்கும் மெய்ஞானிக்குச்
சத்தங்கள் எதக்கடி குதம்பாய்?
சத்தங்கள் எதுக்கடி?
      ----குதம்பை சித்தர். பா10
"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை 
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை 
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன் 
அத்தகு சோதியது விரும்பாரன்றே "
           --------திருமூலர்
               --------திருமந்திரம்.
அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் " 
        ஞானவெட்டியான் 
                 ----திருவள்ளுவர்
பண்னுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "
 
🌲சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல் 

    -அகஸ்தியர் ஞானம் 100 
இப்படி எல்லா சித்தர்களும் தமிழ்மொழி கற்று உணர்ந்தனர்.

🌻🌻இதில் வள்ளலார் ஒரு படி மேலே சென்று

தமிழ்மொழி உச்சரிப்பு சாகாகலைக்கு முக்கிய பங்காகும் என வெளிப்படையாக கூறுகிறார்.

🌲இப்பேர்பட்ட தமிழை இன்னும் விளக்கமாக அடுத்த பதிவில் எப்படி எல்லாம் மறைபொருள் கலையாக உள்ளது.

அதாவது மந்திர சக்தியாக எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

உங்கள் சித்தர் அடிமை🔥
ரா.சங்கர்
ஈரோடு

Friday, 29 July 2016

தமிழ் சினிமா பாடல்கள் Tamil Cinema Songs


++++++++++++++++தமிழ் சினிமா பாடல்கள் 
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஒதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றுரைப்பேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
+++++++++++++++++++++++++++++

Monday, 18 July 2016

விதைக்கத் தெரிந்த மனிதா

SONG – TREES * LAKES * CLEANLINESS

விதைக்கத் தெரிந்த மனிதா
உனக்கு வளர்க்கத் தெரியாதா
வளர்க்கத் தெரிந்த மனிதா
மரங்களை மதிக்கத் தெரியாதா
உனக்கு காக்கத் தெரியாதா
நீருக்கு தவிக்கும் மனிதா
நீர்நிலைகளை காக்கத் தெரியாதா
மழைக்கு ஏங்கும் மனிதா
மழைநீரை சேர்க்கத் தெரியாதா
வழிகளை சீரமைக்கத் தெரியாதா
குப்பை எறியும் மனிதா
உனக்கு தூய்மை தெரியாதா
குப்பை குவிக்கும் மனிதா
உனக்கு குறைக்கத் தெரியாதா
குப்பையை குறைக்கத் தெரியாதா
தூய்மை விரும்பும் மனிதா
உனக்கு அறிய தெரியாதா
அறிந்து கொண்ட மனிதா
செயலில் காட்டத் தெரியாதா
உனக்கு விளைவும் தெரியாதா
PMP

Saturday, 25 June 2016

ஓரெழுத்து சொல்

42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாகவிளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

அ __எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர்

பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை,  மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த

 இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தருகின்றன . அவற்றைத் தெரிந்து கொள்வோம்.