Friday, 29 July 2016

தமிழ் சினிமா பாடல்கள் Tamil Cinema Songs


++++++++++++++++தமிழ் சினிமா பாடல்கள் 
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஒதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றுரைப்பேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
+++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment