Sunday, 12 July 2015

முதுமை

முதுமைத் தாகம்

ட்டுடல் விட்டுப் போகும், 
கணுக்களில் வலி,எ டுக்கும்; 
கொட்டிடும் முடியால் முட்டைக் 
கூடுபோல் கபால மாகும்! 
அட்டைபோல் இருந்த மீசை 
அசைவிலாப் பூரான் ஆகும்! 
பட்டுடல் சுருங்கி நிற்கப் 
பளபளப்(பு) ஒளிந்து கொள்ளும்! 

எட்டடி பாய்ந்த கால்கள் 
இரண்டடி நடந்து சோரும்! 
விட்டமும் துடைத்த தோற்றம், 
வெறுந்தரை பார்த்து நிற்கும்! 
கட்டிய மனைவி தன்னைக் 
கட்டிலில் வைத்த கைகள் 
தொட்டிட நடுங்கும் வேறு 
துணையெனத் தடி,பி டிக்கும்! 

சட்டமாய் உண்ட வாயோ, 
சட்டியில் குடிக்கக் கேட்கும்! 
முட்டவும் குடித்து விட்டால், 
மூச்சு,கீழ் மேலாய் ஓடும்! 
பட்டமும் அறுந்த தைப்போல், 
படபடப்(பு) இதயம் கொள்ளும்! 
இட்டமும் இல்லா வாழ்வு,ஏன்? 
இளமையில் கொல்,என் பேனே! 


மூப்புதான் உடலின் வண்ணம்; 
முதுமையோ மனதின் எண்ணம்! 
காப்புதான் அடக்கம் என்பர்! 
கற்றறிந் தவராம் மூப்பர்! 
சீப்புதான் எண்ணம், ஆனால் 
சிறுமுடி யேனும் தேவை! 
தோப்பெனும் நினைவால் மூப்பைத் 
தோற்றிடச் செய்கின் றேனே! 

நினைவெனும் முக்கா டிட்டு 
நிகழ்வினைக் குறைத்துக் கொண்டு 
முனைவுகள் வளர்த்துக் கொள்ள 
முதுமையைத் தள்ளிப் போட்டுப் 
புனைவுகள் செய்வ தாலே 
போகுமோ உடலின் மூப்பும்! 
மனைவியே சிலபே ருக்கு 
மந்திரம் என்று கேள்வி!

Monday, 6 July 2015

நாலடியார்

சமண முனிவர்கள் 400 பேர்  சேர்ந்து ஒரு  காலத்தை வென்ற  4 அடி பாடல்களை இயற்றினார்கள். சமணர்கள் மறைந்தாலும் அவர்கள் சமைத்த இந்த  நாலடியார்  என்றும் நிலையாக நிற்கும்.   பல்  உறுதியாக இருப்பதற்கு அந்த காலத்தில்  ஆலங் குச்சி, வேப்பங் குச்சி  உபயோகித்து பல் துலக்கினார்கள்.  பல்லை விடுங்கள், நமது சொல்லுக்கு  உறுதியாக  எதை நாம் கற்க வேண்டும் என்று ரெண்டு காவியங்களை  விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்  நமது முன்னோர்.  அவையே  நாலடியாரும் ஈரடியும்.    அதாவது  நாலடியாரும்  திருக்குறளும்.

இதில் நாலடியாரை கொஞ்சம் பார்க்கும்போது அதை  1873க்கு  முன்பே   லீபேர்  என்கிற தரங்கம்பாடி  வெள்ளைக்கார  பாதிரியார்  ஒரு  நல்லவேலை செய்திருக்கிறார்.  இதை ஆங்கிலத்தில்  மொழி பெயர்த்திருக்கிறார்.  வெள்ளைக் காரர்கள் சிலர்  நம்மைவிட  தமிழை நன்றாக  அறிந்திருந்தார்கள். நாம்  தான்  ஏனோ  அவர்கள் மொழியான  ஆங்கிலத்தை  அரைகுறையாக பிடித்துக்கொண்டு  நமது தாய் மொழியை  இரக்கமின்றி தயக்கமின்றி  வெளியேற்றிவிட்டோம்.  தாய்க்கு கொடுக்கும் மதிப்புதானே  தாய் மொழிக்கும் தருகிறோம்.

நாலடியார்  40  அத்தியாயம் கொண்டு  ஒவ்வொன்றிலும் 10 பாடல்கள்.  ஒவ்வொரு பாடலும்  4 அடி கொண்டது.

ஒரு ராஜாவின் அரண்மனையில்  8000 புலவர்கள் கூடியிருந்தனர்.  அவனது அரண்மனையில்  ஏற்கனவே  சில புலவர்கள் இருந்தனர்.  ராஜாவுக்கு  புது  மோகம் புலவர்கள்  மேல் வந்து விட்டது. இனி நாம் எதற்கு  என்று அவர்கள்  அரண்மனையை விட்டு  ராவோடு ராவாக சொல்லாமல் கிளம்பிவிட்டனர். போவதற்கு முன்பு  ஆளுக்கு  ஒரு பாடல்  ஓலைச்சுவடியில் எழுதி தங்கள் தலையணைக்கு கீழே வைத்து விட்டு  சென்றனர்.  மறுநாள்  ராஜா விஷயம் அறிந்து  அத்தனை  ஓலைச்சுவடிகளையும்  நதியில்   எறியச்சொன்னான். ஆற்று  வெள்ளத்தையும் எதிர்த்து  400 ஓலைச்சுவடிகள் மிதந்து வந்தன. ஆச்சர்யப்பட்ட ராஜா  அவற்றை பாதுகாத்து  இப்போது உங்களுக்கு  நாலடியாராக  வீட்டுக்கே  வந்து விட்டது.

நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.

​இளமையோ  அதனால்  விளையும்  அழகோ  சாஸ்வதம்  என்று  எண்ணி  பெருமிதம் அடைகிறோம்.  எந்த  கண்ணாடியில்  நம்  அழகு நம்மை  பெருமிதம் கொள்ள  செய்ததோ  சில வருஷங்கள்  கழித்து  நம்மை  எப்படி காட்டப்போகிறது  என்று  நினைத்து பார்ப்பதில்லையே.  அறிஞர்கள்  இதை  சிந்திப்பார்கள்,  காதோரம் நரை தெரியும்  என்று  ​
நல்லறிவாளர்
​கள்  உணர்ந்தவர்கள்.​வயோதிகம்  வாக்கிங் ஸ்டிக்காகி  வாசலில்  கதவுக்கு  பின்னால்  சுவற்றில்  நமக்காக  சாய்ந்து கிடப்பதை ஞாபகம் கொள்பவர்கள். இளைமையிலேயே 

​பின்னால் ​
மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயே துறவு
​ உணர்வு கொண்டவர்கள்.
 குற்றம் நீங்காத, நிலையற்ற இளமைப் பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தவர், முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் எழுந்திருப்பர்.
​  ஏதோ  யாருக்கோ  வரவேண்டியது தமக்கு வந்துவிட்டதாக  அதிர்ச்சி அடைந்து  அதன் காரணமாக  அதிகமாகவே  தனது  கைப் பணத்தை  டாக்டருக்கு  அளிப்பார்கள். ​



நட்புநார் அற்றன நல்லாரும் அ·கினார்
 அற்புத் தளையும் அவிழ்ந்தன - உட்காணாய்
 வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே
 ஆழ்கலத் தன்ன கலி.

​எவரெல்லாம்  நமக்கு  உகந்தவர்,  உற்ற  நண்பர்கள் என்று நம்பி  பழகினோமோ,  உபசரித்தோமோ  அந்த  பிணைப்பு  எல்லாம்  ​பொட்டலம் கட்டும்  நூலாக  
அற்றுப் போ
​ய்விட்டதே.  எந்தப் 
 பெண்களும்
​ மேல்  பாசமும்  நேசமும் கொண்டு  அவர்கள் பின்னாலேயே  சுற்றி வந்தோமே  அவர்களைக் காணோமே. எங்கே  அந்த  
 அன்
​பு?  சுற்றம் உற்றார்  என்று  பெயரில் சிலர் நம்மருகே  உண்டே  எங்கே  அவர்கள்?  
 மனத்திலே யோசித்துப் பார்! 
​   ​நடுக் 
கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் துன்பம் (முதுமை) வந்து விட்டது! இனி
​ எது நமக்கு  சாஸ்வதம்  என்று  இனியாவது  புரிந்துகொண்டால்  கொஞ்சமாவது 
பயன் உண்டு
​.


வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
 வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
 உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்
 நிலவார் நிலமிசை மேல்.

​எந்த  கருவியும்  வேண்டாம்.  மிக  எளிதில்  அன்றாடம்  நமக்கு  நினைவூட்ட  அந்த  ​ கெட்டிக்கார  இறைவன்  ஒரு  உபாயம்  கொடுத்து இருக்கிறான்.  நாம்  தான்  அதை  புரிந்து கொள்வதில்லை.  
 காலத்தை அளக்கும் கருவியாக விளங்கு
​கிரான்  சூரியன்.  தினமும்  சிகப்பாக  உதிக்கிறான்.  சிகப்பு  டேஞ்சர்  லைட் என்போம்.  
நாள் தவறாமல் 
​ சிவப்பாக ​
உதயமா
​கி  சூரியன்  நினைவூட்டுகிறான். அடே  மனிதா இன்று  இன்னுமொரு நாள்  இந்தா.  போனதெல்லாம்  இனி வராது.  பாசக்கயிறு  நெருங்கி வருகிறது.  உன் 
ஆயுள் 
​முடியும் முன்பே  
பிறருக்கு உதவி செய்
​.
 யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க
​ முடியாது  என்று  உணர்ந்து கொள்.  சூரியன்  குறிப்பாக  உணர்த்துவது 
- ஒரு நாள் கழிந்தது; இரு நாட்கள் கழிந்தன என ஆயுளை அளவிடுவதாக இரு
​கின்ற படியால்
,​
 வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது 
​ தான்  இந்த  பாடல் சொல்வது.


ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
 போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
 நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
 சென்றன செய்வது உரை.

​பாவம்   நாம்  இரவு பகல்  எப்பாடு பட்டாவது நிறைய  ​
செல்வத்தை விரும்பி
​ அடைந்து  அதைச் சேர்த்து 
  பலவாக்கி ​
 பெருக்கிப் 
​புதைத்து  என்று  ஏன்  சொல்கிறேன்?  புதைப்பதே  பிறருக்கு  தெரியாமல் இருக்க தானே.  இப்போது மட்டும்  என்னவாம்?  எங்கோ  ஒரு  வங்கியில்  எங்கேயோ ஒரு தேசத்தில்  மறைவாக  சேர்த்து வைத்து.  இதோ வெளியே  வரப்போகிறது என்று  சொல்லியே  பயத்தை  அவனுக்கு  அளிக்கிறதே இந்த பணம்.  

​எது ​
பெருஞ்செல்
​வம்?  நமக்கே உதவாமல் எங்கோ  மறைந்து கிடக்கும் இதுவா, தான தர்மத்தில் கிடைக்கும்  சந்தோஷமா? ​
அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே! 
​ கானல் நீரைத் தேடி  ஓடுகிறாய். அது உதவும்  என்று கனவு கண்டு 
ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும், 
​ நீ  சேர்த்த பணத்தை பாராமலேயே ​
உன் வாழ் நாட்கள் ஒழி
​யுமே 
! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்!

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்
 நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
 ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
 காக்கை கடிவதோர் கோல்.

​அதோ போகிறாளே  கங்கம்மா,  கைத்தடி ஊன்றி,  இடுப்புக்கு மேல்  முதுகு  ஆடு போல்  வளைந்து தரை பார்த்த  தலையாக என்றும் குனிந்தவாறே  நடக்கிறாளே, கண் தெரியாமல்  தட்டுதடுமாறி,  காது கேளாமல்,  எண்ணற்ற நோயுடன் செல்லும் இவளை  பல வருடங்களுக்கு முன்  எத்தனை  பேர்  சுற்றினர். கண்ணே, மானே  தேனே, ​
மாந்தளிர் போலும் நிறமும், இளமையும் உடைய பெண்ணே!' என்று 
​ ​
பிதற்
​ற்றினார்களே.  அந்த  கனகம்மா  இப்படி தான்  மாறுவாள்  என்று  ஒரு கணமும்  நினைத்தார்களா? அ
றிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ? 
​ ​
அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கையை விரட்ட ஒரு 
​கொம்பாவது கைவசம்  வேண்டும்.  

​நாலடியாரில்  யாக்கை  நிலையாமை  ரொம்பவுமே  சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா?  மேலும்  பார்ப்போமா?​

தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
 மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் மீப்போர்வை
 பொய்ம்மறைய க் காமம் புகலாது மற்றதனைப்
 பைம்மறியாப் பார்க்கப் படும்¡.

​தங்க பஸ்பம் வாங்கி சாப்பிட்டு,  பாதம், முந்திரி  குங்குமப்பூ என்று விழுங்கி,     தனது சருமத்தை  சோப்பால் கழுவி  வாசனைத் ​திரவியம்  தடவி  வளர்க்கிறாயே  உன்  உடம்பை... அப்பனே   அது மேலே  நீ  பார்க்கிற  வெறும் 
தோ
​ல்.  போர்வை.  உள்ளே??  ஸ்கேன்  எடுத்து பார்,  பயந்து போவாய். எத்தனையோ 
 துளைகள் பலவாகி உள்ளே அழுக்கை மறைக்கின்ற போர்வை
​ தான்  உன் உடம்பு  என்கிற  மேல் தோல்.  இதற்கா  இத்தனை   மதிப்பும் 
பெருமையு
​ம் கொடுத்தாய்.  ஆஹா  என்ன  அழிகிய 
 இவ்வுடம்பு! 

​சொல்கிறேன் கேள்.  
மேல் போர்வை கொண்டு உள்ளிருக்கும் அழுக்கை மறைக்காமலும், ஆசை மொழி புகலாமலும் அவ்வுடம்பை 
​ரேஷன் கடைக்கு  சர்க்கரையோ,  அரிசியோ  வாங்க எடுத்துக்கொண்டு செல்லும் ​
ஒரு பையைத் திருப்பிப் பார்ப்பது போல எண்ணிப் பார்க்க வேண்டும்! (அப்போதுதான் உடம்பின் புன்மை புலப்படும்.)
​.  சமண முனிவர்களே  அசாத்தியமான  கற்பனா சக்தி உங்களுடையது.

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
 தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
 தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
 தீர்விடத்து நிற்குமாம் தீது.

​கல்ப கோடி காலம்   இருண்டு கிண்டந்த ஒரு  அறையில்  ஒரு தீபம் 
விளக்கொளி வர, அங்கே இருந்த இருள்
​ எங்கே  மாயமாக  ​
 அக
​ன்றது.   இது போலவே  தான்  
ஒருவன் செய்த தவத்தின் முன்னே
​  அவனது பல  ஜன்ம ​
பாவம் விலகும், விளக்கில் எண்ணெய் குறையும்போது, 
​ தீப ஒளி  மங்கி  ​
இருள் பரவுவது போல் நல்வினை
​  கொஞ்சம் கொஞ்சம்மாக  ​
 நீங்
​க  ஆரம்பித்தால்  மீண்டும்  பாப்பம்  தலை காட்டத் தொடங்கும்.  பிறகு  கெட்டியாக  நம்மைப் பிடித்துக் கொள்ளும்.  


நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
 தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
 சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
 பித்தா¢ன் பேதையார் இல்.

​ஆதி சங்கரர்  நாலடியாரை  நிச்சயம்  படித்திருக்க மாட்டார்.  தமிழ் தெரிந்திருக்காது.   ஆனால்  அவர்  சொல்வதை தான்  சமண முனிவர்கள்  நாலடியாரில்  சொல்கிறார்கள்.  கொஞ்சம்  வேறே மாதிரி  அவ்வளவுதான்.  

யாக்கை ​
நிலையாமையும், நோயும், மூப்பும், சாவுத் துன்பமும் இவ்வுடம்புக்கு உண்டு என 
​நிறைய  ​
ஞான
​ம் புகட்டும் ​
 நூல்களை ஆய்ந்துணர்ந்த, சிறந்த அறிவுடையோர் தமக்கு உறுதியான தவத்தைச் செய்வர். 
​  வெறும்  உப்பு சப்பற்ற ​
முடிவில்லாத இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் சொல்லிக்கொண்டு 
​ ''நஹி நஹி  ரக்ஷதி டுக்ருங்கரணே ''  ஆசாமிகள்   போன்ற 
 அறிவில்லாதவர் உலகில் 
​வேறு  எங்கும் எவரும் ​
இல்லை!

மதித்திறப் பாரும் இறக்க மதியா
 மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
 ஆஈயுந் தலைமேல் இருத்தலால் அ·தறிவார்
 காயும் கதமின்மை நன்று.

​பிறர்  தம்மை  மதிக்கவேண்டும்  என்று  இரவும் பகலும் அலையும்  பல பேர்வழிகளை  நாம்  பார்க்கிறோம்.  தான் பேசினால் கைதட்டல் எதிர்பார்ப்போர்,  தனது  புகைப்படம்  எல்லா சுவற்றிலும்  சிரித்துக்கொண்டே  காட்சி தரவேண்டும் என்று  பணத்தை  வாரி இறைப்பவர்கள் முக்யமாக  ஒரு நீதியை அறியவில்லை. பிறர் மதிப்பு  என்ன  கிரீடம் உன்  தலையில்  ஏற்றி வைக்கப்போகிறது?? 

தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; 
​​ கேவலம்  ஒரு  அல்ப ஜந்துவான  ஒரு  ஈ  கூட  ஒரு  பெரிய  ராஜாவின் 
தலைமேல்
​ தனது காலை  வைத்துக்கொண்டு  உட்காருகிறது.  அதை  லட்சியம் செய்கிறானா அவன்.  அதற்கு மதிப்பு அவ்வளவு தான்.  
 அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இரு
​கிறார்கள்  என்று  புரிந்து கொள்வோம்.


தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
 கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
 அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
 முடிகிற்கும் உள்ளத் தவர்.

​கெட்ட  நேரம்  வந்து விட்டால்,  ​
ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் நெருங்கி மிகவும் அவமதிப்பு 
​ நாலா  பக்கத்திலிருந்து வருகிறது.  நல்ல நேரம் வந்தபோது  ஓஹோ  என்று  வாழ்ந்தோம்.  இப்போது வேறு  நிலைமை.  ஆகட்டுமே  அதனால் என்ன. வந்தது வரவில் வைப்போம். சென்றதை செலவில் வைப்போம் என்ற  மன நிலையோடு  எந்த இடர் ​
வந்த போதிலும், அதற்குக் கலங்காது எடுத்த கா
​ரி
யத்தை நிறைவேற்றும் மனவலிமை மிக்கவர்
​  அறிஞர்கள். 

சிறிதே இடர் கண்டபோதெல்லாம் சினத்தை
​ வெளிக்காட்டி  உயிரையும்  சில சமயம்  விட்டு  அழிபவர்கள்  சிறியோர்.  பொறுத்தார்  பூமியாள்வார். 
மனவலிமைமிக்கவர் கண்டதற்கெல்லாம் சினம் கொள்ளாமல் சாந்தமாயிருப்பர். .

கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
 பேதையோடு யாதும் உரையற்க - பேதை
 உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
 வழுக்கிக் கழிதலே நன்று.

​ஹே   ராஜாவே,  ​
மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.
​  ராஜாவுக்கு  சமண முனிவர்கள்  உபதேசம் செய்கிறார்கள்.  இப்போதெல்லாம்  மந்திரிகள்  அதிகாரிகள்   ராஜாவுக்கு  இதை சொல்கிறார்கள்.  ராஜாக்கள்  யார்.  நாம் தான்.  மக்களே  இந்த நாட்டு மன்னர்கள் அல்லவா?  அவர்கள் சொல்லி  நமக்கு புரியாவிட்டால்  நமக்கு  தீங்கில்லை.   நமக்கு  தான்  அவர்கள்  சொல்லாமலேயே   அனேக  தீங்குகள்  வரிசையாக  அங்கிருந்து வருகின்றனவே.

நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
 தா¡¢த் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
 புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
 சமழ்மையாக் கொண்டு விடும்.

​அவன் கிடக்கிறான்  முட்டாள்.  அவனுக்கு தெரிந்தது  அவ்வளவு  தான்.  லட்சியம் பண்ணாதே அவன் சொன்னதை  என்று சொல்கிறோமே  அது சம்பந்தப் பட்டது  இது.  

நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்கு
​றி
ய செயலாகக் கொள்ளாது; பழிக்கு
​றி
ய செயலாக
​த்தான் ​
கருதும்.

Saturday, 4 July 2015

இரு சொல் காவியங்கள்

கண்ணதாசனின், இரு சொல் விந்தைகள்!

kannadasan-mgr
எம்.ஜி.ஆருடன் கண்ணதாசன்

தமிழில் சுருங்கச் சொல்லி விளங் வைத்தல்!
தமிழின்  ஏராளமான சிறப்புக்களில் ஒன்று, எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல். நுட்பமான கருத்துக்களை, ஆழ்ந்த தத்துவங்களை சிறு சொற்களால் கூறி விளங்க வைக்கும் மொழி உலக மொழிகளிலேயே இது ஒன்று தான். ஏன், வடமொழி, ஆங்கிலம் மற்றும் இதர மொழிகள் இதனுடன் இப்படிப் போட்டி போட முடியாதா என்ற கேள்வி எழுவது இயல்பே! இந்த மொழிகளிலும் இப்படிச் சுருங்கச் சொல்லும் வார்த்தைகள் உண்டு; சூத்திரங்கள் உண்டு. ஆனால் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைய வைக்கும் வேர்ச் சொற்களும் ஒரு சொல்லுக்கு ஏராளமான பொருள்களும் தமிழில் மட்டுமே உண்டு.
இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்!
ஒவ்வொரு சொல்லும் இனிமையானது; ஒவ்வொரு சொல்லும் அழகானது! இதுவே தமிழுக்கு உள்ள தனிச் சிறப்பு.
இதில் இரு சொற்களில் ஏராளமான கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் அடக்கிக் காட்டியவர் கண்ணதாசன்! இது அவர் அப்பன், பாட்டன், முப்பாட்டனிடமிருந்து அவர் பெற்ற சொத்து! தமிழ்ச் சொத்து!
வள்ளுவனின் இரு சொல் விளையாட்டு
எடுத்துக் காட்டாக வள்ளுவரின் குறளை எடுத்துக் கொள்வோம். அவர் கடலை (கடல் போன்ற அளவு கருத்துக்களை) குறுக இரு சொற்களில் அடக்கிக் காட்டியவர்.
கற்கக் கசடற – குறள் 391
செய்க பொருளை – குறள் 759
என்னைமுன் நில்லன்மின் – குறள் 771
உண்ணற்க கள்ளை – குறள் 922
இருநோக்கு இவளுன்கண் – குறள் 1091
நினைத்தொன்று சொல்லாயோ – குறள் 1241
காண்கமன் கொண்கனை – குறள் 1265
வருகமன் கொண்கன் – குறள் 1266
பெரும் சிறப்புகளை அடக்கிய இந்த இரு சொல் காவியங்கள் தமிழில் மட்டுமே உள்ளன.
இளங்கோவடிகளின் இரு சொல் அறிவுரை
அடுத்து சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவடிகள் காப்பிய முடிவில் மனித குலத்திற்கே மாபெரும் செய்தியைச் சுருக்கமாகச் சொல்கிறார் – இரு இரு சொற்களால்! இதை மிஞ்சிய அறவுரையை, அறிவுரையை யாரும் தர முடியாது.
வஞ்சிக் காண்டத்தில், வரந்தரு காதையில் 186 முதல் 202 முடிய உள்ள வரிகளைப் படித்தால் இளங்கோவடிகளின் அற்புத தவமும் தமிழின் சிறப்பும் புரியும், இதில் சில இரு சொற் ஓவியங்கள் இதோ:-
தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின்
பொய்யுரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்;
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்: தவம்பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
பொய்க்கரி போகல்மின்; பொருள்மொழி நீங்கல்மின்;
அருமையான தமிழ் மொழியின் விந்தைகளை இரு சொற்களில் எப்படி பார்க்க முடிகிறது, பார்த்தீர்களா!
இப்படி தேவார திருவாசகம், நாலாயிர திவ்ய பிரபந்தம்,சங்க இலக்கியம், சமீப கால நூல்கள் போன்ற அனைத்திலுமே இந்த இரு சொல் விந்தை ஏராளம் உண்டு.
பாரதியாரின் இரு சொல் மந்திரம்
கடைசியாக மஹாகவி பாரதியார் இதில் ஆற்றிய விந்தைகள் ஏராளம் உண்டு; இடம் கருதி சிலவற்றை மட்டும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
வாழிய செந்தமிழ்!
சுடரே போற்றி!
விதியே வாழி!
செய்க தவம்!
சாகாவரம் அருள்வாய்!
வந்தேமாதரம் என்போம்!
நெஞ்சு பொறுக்குதிலையே!
ஆயிரக் கணக்கில் இப்படி இரு சொல் ஓவியங்களைத் தமிழில் எடுக்க முடியும்; வேறு மொழிகளில் இனிமையும் நீர்மையும் கொண்டுள்ள உவமைகளைக் காண்பது அரிது!
கண்ணதாசனின் இரு சொல் திரை ஓவியங்கள்
இந்த பாரம்பரியத்தில் வந்த கண்ணதாசனுக்குக் காலம் கை கொடுத்தது; திரைப்படத் துறை மின்னி மின்னி முன்னேறும் பருவத்தில் அவர் பாடலாசிரியராக பல்வேறு வாழ்க்கை நிலைக் களன்களுக்காக பாடல் எழுத வேண்டிய சூழ்நிலையை இறைவன் உருவாக்கி இருந்தான்.
கலங்காதிரு மனமே என்ற இரு சொல் முத்திரையுடன் தன் காலடித் தடத்தை திரைப்படப் பாடல் துறையில் அவர் பதித்தார். இது தான் அவர் இயற்றிய முதல் திரைப்படப் பாடல்.கன்னியின் காதலி என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது இந்தப் பாடல்!
கலங்காதிரு மனமே! – நீ
கலங்காதிரு மனமே!  – உன்
கனவெல்லாம் நனவாகும்
ஒரு தினமே!
இனி பல சொல்லோவியங்களை இரு சொற்களில் படைத்து திரையுலகப் பாடல்களில் ஒரு தனி ஏற்றத்தைத் தந்த கண்ணதாசனின் பாடல்களைத் தொகுத்து அவற்றின் சிறப்பை எழுத ஒரு தனி நூல் தேவையாயிருக்கும் என்பதால் சில பாடல்களை மட்டும் இங்கே சுட்டிக் காட்டி முடிக்கலாம்! வாசகர்கள் அசை போட்டு அதன் சிறப்புகளை மனதில் ஏற்றி மகிழ முடியும்!
பாடலும் படமும்!
கங்கைக்கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம் –ஓ
கண்ணன் நடுவினிலே
காலை இளங்காற்று
பாடிவரும் பாட்டு
எதிலும் அவன் குரலே   – படம் : வானம்பாடி
அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே – ஆஹா!
வாழ்க்கை வாழ்வதற்கே   – படம்  வாழ்க்கை வாழ்வதற்கே
வரவு எட்டணா
செலவு பத்தணா
அதிகம் இரண்டனா –
கடைசியில் துண்டனா     படம் பாமா விஜயம்
பாட்டுப் பாடவா
பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா
பறந்து செல்லவா       படம்  தேன்நிலவு
பேசுவது கிளியா – இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில்கொண்ட சிலையா
கொத்து மலர்க்கொடியா
பாடுவது கவியா – இல்லை
பாரிவள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா     படம் : பணத்தோட்டம்
கண்ணெதிரே தோன்றினாள்
கனிமுகத்தைக் காட்டினாள்
நேர்வழியில் மாற்றினாள்
நேற்றுவரை ஏமாற்றினாள்           படம்  இருவர் உள்ளம்
நீ என்பதென்ன
நான் என்பதென்ன                 படம் வெண்ணிற ஆடை
தோட்டத்து மாப்பிள்ளை
வீட்டைத் தேடிவந்தால்
சும்மா வரலாமா                   படம்   இதயத்தில் நீ
களங்கமில்லா காதலிலே
காண்போம் இயற்கையெலாம்          படம்   இல்லறஜோதி
பொன்னென்பேன் சிறு
பூவென்பேன் – காணும்
கண்ணெண்பேன் வேறு
என்னென்பேன்?!                  படம் போலீஸ்காரன் மகள்
kanna2
நூற்றுக்கணக்காக உள்ள இரு சொற்பாடல்களில் மேலே பத்தைப் பார்த்தோம்.
இவற்றில் நவரஸங்களும் ததும்பும்; உணர்ச்சிகள் பொங்கும்; தமிழ் சுருக்கமாக விளையாடும்; விரிவாக அர்த்தத்தைத் தரும்.
இவற்றைத் தொகுத்துப் பாடினாலே
வரும் சுகம்
இது நிஜம்!
மூன்று சொல் கவிதைகளுக்குள் மூழ்க வேண்டுமெனில் அது ஒரு கடல் அல்லவா! அங்கு முத்தும் பவழமும் சங்கும் – இன்னும் விலை மதிப்பில்லா மணிகள் அனைத்தும் அல்லவா கிடைக்கும்.
கவியரசின் அனுபவி ராஜா அனுபவி படத்தின் முத்தான வார்த்தைகள் நினைவுக்கு வருகிறதா –   முத்துக் குளிக்க வாரீகளா!!
Thanks Sri KSR

Wednesday, 1 July 2015

உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம்



Picture: Rare photo of U Ve Swaminatha Iyer whose birth day falls on 19th February.
உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரம்
தமிழனாகப் பிறக்கும் பேறு பெற்ற ஒவ்வொரு தமிழனும், தமிழ் தெரிந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு உத்தமர் உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதையர் ஆவார். (1855-1942) அவரது ‘என் சரித்திரம்’ அற்புதமான தமிழ் உரைநடைக்கு ஒர் எடுத்துக் காட்டு. இந்த நூலைப் படிப்பதால் பல பயன்கள் உண்டு.
தமிழைக் காத்து அரிய ஓலைச்சுவடிகளைச் சேகரித்து அவற்றை முறையாக ஆராய்ந்து அதில் உள்ள உண்மைப் பொருளைக் கண்டறிந்து பல அற்புத நூல்களைப் பதிப்பித்த ஒரு தமிழறிஞரின் வாழ்வை அறிந்து கொள்ளும் பேறு இதைப் படிப்பதால்  முதல் பரிசாக நமக்குக் கிடைக்கிறது. அடுத்து தமிழின் ஆழத்தையும் அற்புதத்தையும் அறியும் பேறு கிடைக்கிறது. அடுத்து ஜிலு ஜிலுவென்ற தெளிந்த ஓட்டத்தை உடைய தூய பளிங்கு நீர் மானசசரோவரிலிருந்து கங்கை  பிரவாகமாக நாடு முழுவதும் பாய்வது போன்ற தமிழ் பிரவாகம் நம்மை பரவசப்படுத்துகிறது. 
கவிகளுள் மகாகவி கம்பன். பத்தாயிரம் பாடல்களைப் பாடியவன். அவன் போல் பத்து மடங்கு அதாவது நூறாயிரம் – ஒரு லட்சம் பாடல்களைப் பாடி ‘பத்துக் கம்பன்’ என்ற பெயரைப் பெற்ற  மகாவித்துவான திரிசிரபுரம்  மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைப் பற்றிய செய்திகளை அறிய முடிகிறது. அவரின் மாணாக்கரே உ.வே.சா. 
தமிழுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த மாமேதையின் வீட்டில் ஒரு சிறிய சம்பவம்! அதை அவர் சொற்களாலேயே பார்ப்போம்:
“சென்னையிலிருந்து பைண்டர் நூறு சிந்தாமணி பிரதிகள் வரையில் பைண்டு செய்து ஒரு பெட்டியில் அனுப்பியிருந்தார். அதைப் பிரித்துப் புஸ்தகங்களை எடுத்துக் கோலம் போட்ட ஒரு பலகையின் மேல் வைத்து மாலை சுத்திக் கற்பூர நீராஞ்சனம் செய்து மஞ்சள் நீர் சுற்றி என் தாயார் என் கையில் எடுத்து அளித்து ஆசீர்வாதம் செய்தார். என் தந்தையார் கண்குளிரக் கண்டு மகிழ்ந்தார்” 
எப்படிப்பட்ட வைபவம்! எப்படிப்பட்ட தாயார்! எப்படிப்பட்ட தந்தையார்! என் சரித்திரம் என்ற நூலில் உ.வே.சா. இதைக் குறிப்பிட்டிருக்கிறார். 
தனக்குக் குடும்பக் கவலையே இல்லாமல்  குடும்பத்தினர் பார்த்துக் கொண்டதால் தமிழ்ப் பணியைத் தன்னால் தொடர்ந்து ஆற்ற முடிந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். சங்க நூல்களைச் சேகரித்து அவற்றைப் பதிப்பித்து தமிழர்களுக்கு ஒர் முகவரியைத் தந்தவர் உ.வே.சா. தனது வாழ்நாளில் 91 அரிய நூல்களைப் பதிப்பித்தவர் அவர். சுமார் 3067 ஏட்டுப் பிரதிகளை அவர் சேகரித்தார். அதற்காக அவர் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.
Picture of postage stamp to honour U.Ve.Sa.
என் சரித்திரத்தில் வரும் சில நிகழ்வுகளை இங்கே நினைவு கூர்வோம்! அந்நாளில் எல்லா நூல்களையும் பாடம் கேட்டுப் பயில்வதே பழக்கமாக இருந்தது. பெரியபுராணத்தை மகாவித்துவான் விளக்கமாகப் பாடம் சொன்ன போது நடந்த சம்பவம் இது. 
“கண்ணப்ப நாயனார் செயலைக் கண்டு சிவகோசரியார் வருத்தமுற்றதாகச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் மேலே படித்தோம். உடனே பிள்ளையவர்கள், “இங்கே சில செய்யுட்கள் இருக்க வேண்டும். சிவபெருமான் கண்ணப்ப நாயனாரது அன்பின் பெருமையைச் சிவகோசரியாருக்கு வெளியிடுவதாக அமைந்துள்ள பகுதியில் சில அருமையான செய்யுட்களைப் பதிப்பிக்காமல் விட்டு விட்டார்கள்” என்று சொல்லித் தம் பெட்டியில் இருந்த பெரியபுராண ஏட்டுப் பிரதியை என்னை எடுத்து வரச்செய்து அதனைப் பிரித்துப் பார்த்தார். அவர் கூறியபடியே அங்கே ஐந்து செய்யுட்கள் காணப்பட்டன. அவற்றைப் படிக்கச் செய்து பொருள் கூறினார். நாங்கள் யாவரும் அந்த உயிருள்ள புஸ்தகசாலையின்  ஞாபகசக்தியை அறிந்து வியந்தோம்.” 
அனைத்துச் செய்யுள்களையும் மனப்பாடமாக அறிந்த பெரும் வித்தகர் பற்றிய அரிய செய்தியைக் கூறும் உ.வே.சா அடுத்துச் சொல்லும் நிகழ்ச்சி நம்மை வேதனை அடையச் செய்கிறது. தமிழன் இப்படி இருக்கலாமா என்று வெட்கமடையச் செய்கிறது.
பிற்பகலில் தொடங்கிய கண்ணப்ப நாயனார் புராணம் இரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவேறியது.
அப்பால் மடத்திலேயே ஆகாரம் செய்து கொள்ளும்படி என் ஆசிரியரைத் தம்பிரான் வற்புறுத்திக் கூறினர். அவர் அவ்வாறே இசைந்து  அங்கு உணவு உட்கொண்டார். நான் அதற்குள் என் சாப்பாட்டு விடுதிக்குச்சென்று போஜனம் செய்துவிட்டு வந்தேன்.


Picture of U.Ve.Sa.’s Statue at his birth place Uthamadhanapuram
ஆகாரம் ஆன பிறகு என் ஆசிரியர் தம்பிரான்களிடம் விடை
பெற்றுக்கொண்டு தம் வீடு சென்றார். நானும் அவருடன் சென்றேன். அப்போது அவர், “மடத்தில் ஆகாரம் செய்தமையால் இன்று நெய் கிடைத்தது” என்றார். அந்த வார்த்தை என் உள்ளத்தை வருத்தியது. அவர் சில நாட்களாக நெய் இல்லாமல் உண்டு\ வந்தார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் கையில் இல்லை. குறிப்பறிந்து யாரேனும் உதவினாலன்றித் தாமாக ஒருவரிடம் இன்னது வேண்டுமென்று சொல்லிப் பெறும் வழக்கம் அவரிடம் பெரும்பாலும் இல்லை. இடைவிடாது பாடம் சொல்லி வந்த அவர் நெய் இல்லாமலே உண்டு வருவதை நான் அறிந்தவனாதலால் “இன்று நெய் கிடைத்தது” என்று அவர் கூறும்போது  அவர் உள்ளம் எவ்வளவு வெம்பியிருந்ததென்பதை உணர்ந்தேன்.
வறுமையின் கொடுமை எனக்குப் புதிதன்று. அதனால் விளையும்
துன்பத்தை அறிவு வந்தது முதலே நான் உணரத் தொடங்கி யிருக்கிறேன்.ஆயினும் பிள்ளையவர்களிடம் அதனை நான் எதிர்பார்க்கவில்லை.
“பெரிய கவிஞர், தக்க பிரபுக்களால் நன்கு மதிக்கப்படுபவர், தமிழுலகமுழுதும் கொண்டாடும் புகழ் வாய்ந்தவர், ஒரு பெரிய சைவ ஆதீனத்துச் சார்பிலே இருந்து வருபவர், சில நாள் நெய் இல்லாமல் உண்டார், ஒரு வேளை  கட்டளை மடத்தில் உண்ட உண்வு அவர் நெஞ்சப் புண்ணுக்கு மருந்தாயிற்று” என்ற விஷயங்களை அவரோடு நெருங்கிப் பழகினவரன்றி மற்றவர்களால் அறிய முடியாது. அவரும் அந்நிலையை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
அவருடைய வாழ்க்கையே நிலையற்றதாகத்தான் இருந்தது. “இருந்தால் விருந்துணவு; இல்லாவிட்டால் பட்டினி” என்பதே அக்கவிஞர் பிரானுக்கு உலகம் அளித்திருந்த வாழ்க்கை நிலை. எனக்கு அதனை உணர உணர ஆச்சரியமும் வருத்தமும் உண்டாயின.”
உ.வே.சா அவர்கள் வருத்தத்துடன் பதிவு செய்யும் இந்த வார்த்தைகள் தமிழன் எப்படி வாழும் போதே பெரிய கவிஞர்களை இனம் கண்டு கொண்டதில்லை என்பதை நன்கு உணர வைக்கிறது.
பாரதியார் பட்ட சிரமம் போலவே மகா கவிஞரும் வேதனைப் பட்டு வாடியிருக்கிறார்.
++++++++++++++++++++++++++++++++++

தமிழர்களின் பெரும் புகழ் கூறும் சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்த பின்னர் புறநானூறு நூலைத் திருத்தமுறப் பதிப்பிக்கும் முயற்சியில் ஐயர் அவர்கள் ஈடுபட்டார். அதைத் திருத்தமுறை முடித்த அவர் இப்படிப் பெருமிதப்பட்டார்:- 
“புத்தகம் முடிந்து பார்க்கும்பொழுது, ‘நானா இவ்வளவும் செய்தேன்!’
என்று எனக்கே பிரமிப்பாக இருந்தது. இறைவன் திருவருளை வழுத்தினேன்.புத்தகத்தின் அமைப்பைப் பார்த்து நண்பர்களெல்லாம் பாராட்டி எழுதினர்.”
 
புற நானூறைப் பார்த்து மிகவும் மகிழ்ந்த பாண்டித்துரை தேவர் ஐயரை வெகுவாகப் பாராட்டி அடுத்த நூலுக்கென ஐநூறு ரூபாய் வழங்கினார்.
அடுத்து மணிமேகலை ஆராய்ச்சியில் அவர் தீவிரமாக இறங்கினார். புத்த சமயம் பற்றிய கருத்துக்களையும் புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் நன்கு ஓர்ந்து பயின்றார். மணிமேகலையில் வரும் நல்ல கருத்துக்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. 
அவரே கூறி வியக்கும் சில பகுதிகளைக் காண்போம்:-
“பௌத்த சமயத்தினர் கூறும் நான்கு சத்தியங்களாகிய துக்கம்,
துக்கோற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்னும்
நான்கையும்,
பிறந்தோ ருறுவது பெருகிய துன்பம்;பிறவா ருறுவது பெரும்பே ரின்பம்;பற்றின் வருவது முன்னதுபின்ன
தற்றோ ருறுவ தறிக
என்று மணிமேகலை சுருக்கமாகக் கூறுகிறது. புத்த பிரானைப் புகழும்
பகுதிகள் பல. தயாமூல தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்த அவர் திறத்தை நன்கு வெளிப்படுத்தும் அடிகளை நான் படிக்கும்போதெல்லாம் என் உடல் சிலிர்க்கும்.
(புத்தரைத்) ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன், மாரனை வெல்லும் வீரன்,  தீநெறிக் கடும்பகை கடிந்தோன், பிறர்க்கற முயலும் பெரியோன், துறக்கம் வேண்டாத் தொல்லோன்’ என்பன முதலிய தொடர்களால் பாராட்டி இருக்கிறார் மணிமேகலை ஆசிரியர்.
அன்ன தானத்தைச் சிறப்பிக்கும்,
மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோருயிர்  கொடுத்தோரே
என்ற அடிகள் என் உள்ளத்தைக் கவர்ந்தன.”
பல்வேறு அறிஞர்களை நாடி தகுந்த விளக்கங்களை எல்லாம் பெற்று மணிமேகலை நூல் வெளியிடப்பட்டவுடன் தமிழ் உலகம் வியந்தது,
1897-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. அப்போது
கும்பகோணத்திற் கூடிய கூட்டம் கணக்கில் அடங்காது. திருவாவடுதுறை  ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள மடத்தில் விஜயம் செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து  கூடினர்.
அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில்வித்துவான்களுடைய உபந்நியாசங்களும் சல்லாபங்களும் நடைபெற்றன. ஒரு நாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூசித்து உத்தம சம்பாவனை செய்வதாக ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச் சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்து ஆசனங்களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி “அந்த ஆசனத்தில் இருக்க வேண்டும்” என்று ஆறாவது ஆசனத்தைக் காட்டினார். எனக்குத் துணுக்கென்றது. வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே ஈடுபட்டு எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கே ஒளியை உண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே! நான் எங்கே? நான் யோசனைசெய்து நிற்பதை அறிந்த தேசிகர், “என்ன யோசிக்கிறீர்கள்? அப்படியே இருக்க வேண்டும்” என்றார். “இவர்களுக்குச் சமானமாக இருக்க எனக்குத் தகுதி இல்லையே” என்றேன். தேசிகர், “தகுதி உண்டென்பதை இந்த உலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில் தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச் சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்ட உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன் திருவருளை வாழ்த்தினேன்.”
 
இப்படி உத்தம சம்பாவனையை திருவாவடுதுறை ஆதீனகர்த்தரிடம் பெற்று மகிழ்ச்சி அடைந்தார் ஐயர் அவர்கள்.
வாழ் நாள் முழுவதும் தமிழ்ப் பணியே தன் பணி என்ற சீரிய கொள்கையை மேற்கொண்டு அதற்காகவே வாழ்ந்தார் அவர்.
அவரது வாழ்க்கையை ஊன்றிக் கவனித்தால் உழைப்புக்கும் தியாகத்திற்கும் தகுந்த மதிப்பை அவர் பெறவில்லை என்பதை நாம் நன்கு அறிய முடிகிறது.
மஹாகவி பாரதியாரே தம் கவிதையில் இதை எண்ணி வருந்தி அவருக்கு ஆறுதல் கூறி இருக்கிறார்,
மஹாமஹோபாத்தியாய என்ற விருதை பிரிட்டிஷ் அரசு வழங்கி கௌரவித்ததை ஒட்டி பிரஸிடென்ஸி காலேஜ் மாணவர்கள் ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்து அதற்கு மஹாகவி பாரதியாரையும் அழைத்தனர். விழாவிற்கு வந்த பாரதியார் ஐயர் அவர்க்ளைப் போற்றிப் பாடிய பாடலில், 
நிதியறியோம், இவ்வுலகத்தொரு கோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க
குடந்தை நகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயிற்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றித் துலங்குவாயே 
என்று அற்புதமாகக் குறிப்பிட்டு அவர் நிதியின்றியும் உலகத்தின் கோடி இன்பம் துய்த்தலின்றியும் வாழ்ந்ததை வருத்தத்துடன் நினைவு கூர்கிறார். அதனால் என்ன, பொதியமலை பிறந்த தமிழ் உள்ளளவும் அதைப் பாடும் புலவர் உள்ளளவும் அவர் நா உன் துதி செய்யும் என்று அற்புதமாக வாழ்த்துகிறார். 
அன்னியரே மஹாமஹோபாத்தியாய பட்டம் தருகின்றனர் எனில் முன்னால் இருந்த “அப்பாண்டியர் நாள் இருந்திருப்பின் இவன் பெருமை மொழியாலாமோ” என்று வியக்கிறார். 
தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் சரித்திரம் மகத்தானது. தமிழர்களுக்கு உத்வேகம் ஊட்டுவது.அனைவரும் படிக்க வேண்டியது!
அன்னாரை நெஞ்சின் ஆழத்திலிருந்து துதி செய்து போற்றுவோம்; அவர் புகழ் பரப்புவோம்! 
அற்புதமான ‘என் சரித்திரம்’ நூலை முழுவதுமாக (122 அத்தியாயங்கள் சுமார் 772 பக்கங்கள் அடங்கியது)  ஒரு முறையேனும் தமிழர் என நாமம் கொண்டோர் படிக்க வேண்டும். இணையதளத்தில் அதைக் கட்டணமின்றிப் படிக்கலாம்; இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்; பிறருக்கும் அனுப்பலாம்.
அதற்கான இணையதளத் தொடர்பு இதோ:-
ANBUDAN
<>KSR<>