இதில் நாலடியாரை கொஞ்சம் பார்க்கும்போது அதை 1873க்கு முன்பே லீபேர் என்கிற தரங்கம்பாடி வெள்ளைக்கார பாதிரியார் ஒரு நல்லவேலை செய்திருக்கிறார். இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். வெள்ளைக் காரர்கள் சிலர் நம்மைவிட தமிழை நன்றாக அறிந்திருந்தார்கள். நாம் தான் ஏனோ அவர்கள் மொழியான ஆங்கிலத்தை அரைகுறையாக பிடித்துக்கொண்டு நமது தாய் மொழியை இரக்கமின்றி தயக்கமின்றி வெளியேற்றிவிட்டோம். தாய்க்கு கொடுக்கும் மதிப்புதானே தாய் மொழிக்கும் தருகிறோம்.
நாலடியார் 40 அத்தியாயம் கொண்டு ஒவ்வொன்றிலும் 10 பாடல்கள். ஒவ்வொரு பாடலும் 4 அடி கொண்டது.
ஒரு ராஜாவின் அரண்மனையில் 8000 புலவர்கள் கூடியிருந்தனர். அவனது அரண்மனையில் ஏற்கனவே சில புலவர்கள் இருந்தனர். ராஜாவுக்கு புது மோகம் புலவர்கள் மேல் வந்து விட்டது. இனி நாம் எதற்கு என்று அவர்கள் அரண்மனையை விட்டு ராவோடு ராவாக சொல்லாமல் கிளம்பிவிட்டனர். போவதற்கு முன்பு ஆளுக்கு ஒரு பாடல் ஓலைச்சுவடியில் எழுதி தங்கள் தலையணைக்கு கீழே வைத்து விட்டு சென்றனர். மறுநாள் ராஜா விஷயம் அறிந்து அத்தனை ஓலைச்சுவடிகளையும் நதியில் எறியச்சொன்னான். ஆற்று வெள்ளத்தையும் எதிர்த்து 400 ஓலைச்சுவடிகள் மிதந்து வந்தன. ஆச்சர்யப்பட்ட ராஜா அவற்றை பாதுகாத்து இப்போது உங்களுக்கு நாலடியாராக வீட்டுக்கே வந்து விட்டது.
நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல்ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.
இளமையோ அதனால் விளையும் அழகோ சாஸ்வதம் என்று எண்ணி பெருமிதம் அடைகிறோம். எந்த கண்ணாடியில் நம் அழகு நம்மை பெருமிதம் கொள்ள செய்ததோ சில வருஷங்கள் கழித்து நம்மை எப்படி காட்டப்போகிறது என்று நினைத்து பார்ப்பதில்லையே. அறிஞர்கள் இதை சிந்திப்பார்கள், காதோரம் நரை தெரியும் என்று
நல்லறிவாளர்
கள் உணர்ந்தவர்கள்.வயோதிகம் வாக்கிங் ஸ்டிக்காகி வாசலில் கதவுக்கு பின்னால் சுவற்றில் நமக்காக சாய்ந்து கிடப்பதை ஞாபகம் கொள்பவர்கள். இளைமையிலேயே
பின்னால்
மூப்பு நிச்சயமாக வரும் என்று கருதி இளமையிலேயே துறவு
உணர்வு கொண்டவர்கள்.
குற்றம் நீங்காத, நிலையற்ற இளமைப் பருவத்தில் மகிழ்ந்து வாழ்ந்தவர், முதுமைக் காலத்தில் கோலை ஊன்றிக் கொண்டு வருத்தத்துடன் எழுந்திருப்பர்.
ஏதோ யாருக்கோ வரவேண்டியது தமக்கு வந்துவிட்டதாக அதிர்ச்சி அடைந்து அதன் காரணமாக அதிகமாகவே தனது கைப் பணத்தை டாக்டருக்கு அளிப்பார்கள்.
நட்புநார் அற்றன நல்லாரும் அ·கினார்
அற்புத் தளையும் அவிழ்ந்தன - உட்காணாய்
வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் வந்ததே
ஆழ்கலத் தன்ன கலி.
எவரெல்லாம் நமக்கு உகந்தவர், உற்ற நண்பர்கள் என்று நம்பி பழகினோமோ, உபசரித்தோமோ அந்த பிணைப்பு எல்லாம் பொட்டலம் கட்டும் நூலாக
அற்றுப் போ
ய்விட்டதே. எந்தப்
பெண்களும்
மேல் பாசமும் நேசமும் கொண்டு அவர்கள் பின்னாலேயே சுற்றி வந்தோமே அவர்களைக் காணோமே. எங்கே அந்த
அன்
பு? சுற்றம் உற்றார் என்று பெயரில் சிலர் நம்மருகே உண்டே எங்கே அவர்கள்?
மனத்திலே யோசித்துப் பார்!
நடுக்
கடலில் மூழ்கும் கப்பலில் இருப்போர்க்கு நேர்ந்த துன்பம் போலத் துன்பம் (முதுமை) வந்து விட்டது! இனி
எது நமக்கு சாஸ்வதம் என்று இனியாவது புரிந்துகொண்டால் கொஞ்சமாவது
பயன் உண்டு
.
வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின் யாரும்
நிலவார் நிலமிசை மேல்.
எந்த கருவியும் வேண்டாம். மிக எளிதில் அன்றாடம் நமக்கு நினைவூட்ட அந்த கெட்டிக்கார இறைவன் ஒரு உபாயம் கொடுத்து இருக்கிறான். நாம் தான் அதை புரிந்து கொள்வதில்லை.
காலத்தை அளக்கும் கருவியாக விளங்கு
கிரான் சூரியன். தினமும் சிகப்பாக உதிக்கிறான். சிகப்பு டேஞ்சர் லைட் என்போம்.
நாள் தவறாமல்
சிவப்பாக
உதயமா
கி சூரியன் நினைவூட்டுகிறான். அடே மனிதா இன்று இன்னுமொரு நாள் இந்தா. போனதெல்லாம் இனி வராது. பாசக்கயிறு நெருங்கி வருகிறது. உன்
ஆயுள்
முடியும் முன்பே
பிறருக்கு உதவி செய்
.
யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க
முடியாது என்று உணர்ந்து கொள். சூரியன் குறிப்பாக உணர்த்துவது
- ஒரு நாள் கழிந்தது; இரு நாட்கள் கழிந்தன என ஆயுளை அளவிடுவதாக இரு
கின்ற படியால்
,
வாழ்நாள் முடிவதற்கு முன்னரே நல்லறம் செய்து வாழவேண்டும் என்பது
தான் இந்த பாடல் சொல்வது.
ஆவாம்நாம் ஆக்கம் நசைஇ அறம்மறந்து
போவாம்நாம் என்னாப் புன்நெஞ்சே - ஓவாது
நின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாட்கள்
சென்றன செய்வது உரை.
பாவம் நாம் இரவு பகல் எப்பாடு பட்டாவது நிறைய
செல்வத்தை விரும்பி
அடைந்து அதைச் சேர்த்து
பலவாக்கி
பெருக்கிப்
புதைத்து என்று ஏன் சொல்கிறேன்? புதைப்பதே பிறருக்கு தெரியாமல் இருக்க தானே. இப்போது மட்டும் என்னவாம்? எங்கோ ஒரு வங்கியில் எங்கேயோ ஒரு தேசத்தில் மறைவாக சேர்த்து வைத்து. இதோ வெளியே வரப்போகிறது என்று சொல்லியே பயத்தை அவனுக்கு அளிக்கிறதே இந்த பணம்.
எது
பெருஞ்செல்
வம்? நமக்கே உதவாமல் எங்கோ மறைந்து கிடக்கும் இதுவா, தான தர்மத்தில் கிடைக்கும் சந்தோஷமா?
அறத்தை மறந்து இறந்துபோவோம் நாம் என்று எண்ணாத அற்ப நெஞ்சே!
கானல் நீரைத் தேடி ஓடுகிறாய். அது உதவும் என்று கனவு கண்டு
ஓயாமல் உழைத்து வாழ்கின்றாய். எனினும்,
நீ சேர்த்த பணத்தை பாராமலேயே
உன் வாழ் நாட்கள் ஒழி
யுமே
! இனி நீ மறுமைக்காகச் செய்யப் போவதுதான் என்ன? சொல்!மாக்கேழ் மடநல்லாய் என்றரற்றும் சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.
அதோ போகிறாளே கங்கம்மா, கைத்தடி ஊன்றி, இடுப்புக்கு மேல் முதுகு ஆடு போல் வளைந்து தரை பார்த்த தலையாக என்றும் குனிந்தவாறே நடக்கிறாளே, கண் தெரியாமல் தட்டுதடுமாறி, காது கேளாமல், எண்ணற்ற நோயுடன் செல்லும் இவளை பல வருடங்களுக்கு முன் எத்தனை பேர் சுற்றினர். கண்ணே, மானே தேனே,
மாந்தளிர் போலும் நிறமும், இளமையும் உடைய பெண்ணே!' என்று
பிதற்
ற்றினார்களே. அந்த கனகம்மா இப்படி தான் மாறுவாள் என்று ஒரு கணமும் நினைத்தார்களா? அ
றிவுடையோர், அற்ப உடம்பின் இழிவை எண்ணிப் பார்க்க மாட்டார்களோ?
அவ்வுடம்பில் ஈயின் சிறகு அளவான சிறிய தோல் அறுபட்டாலும், அந்த இடத்தில் உண்டான புண்ணை நோக்கி வரும் காக்கையை விரட்ட ஒரு
கொம்பாவது கைவசம் வேண்டும்.
நாலடியாரில் யாக்கை நிலையாமை ரொம்பவுமே சொல்லப்பட்டிருக்கிறது அல்லவா? மேலும் பார்ப்போமா?
தோல்போர்வை மேலும் துளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும்
மீப்போர்வை மாட்சித்து உடம்பானால் மீப்போர்வை
பொய்ம்மறைய க் காமம் புகலாது மற்றதனைப்
பைம்மறியாப் பார்க்கப் படும்¡.
தங்க பஸ்பம் வாங்கி சாப்பிட்டு, பாதம், முந்திரி குங்குமப்பூ என்று விழுங்கி, தனது சருமத்தை சோப்பால் கழுவி வாசனைத் திரவியம் தடவி வளர்க்கிறாயே உன் உடம்பை... அப்பனே அது மேலே நீ பார்க்கிற வெறும்
தோ
ல். போர்வை. உள்ளே?? ஸ்கேன் எடுத்து பார், பயந்து போவாய். எத்தனையோ
துளைகள் பலவாகி உள்ளே அழுக்கை மறைக்கின்ற போர்வை
தான் உன் உடம்பு என்கிற மேல் தோல். இதற்கா இத்தனை மதிப்பும்
பெருமையு
ம் கொடுத்தாய். ஆஹா என்ன அழிகிய
இவ்வுடம்பு!
சொல்கிறேன் கேள்.
மேல் போர்வை கொண்டு உள்ளிருக்கும் அழுக்கை மறைக்காமலும், ஆசை மொழி புகலாமலும் அவ்வுடம்பை
ரேஷன் கடைக்கு சர்க்கரையோ, அரிசியோ வாங்க எடுத்துக்கொண்டு செல்லும்
ஒரு பையைத் திருப்பிப் பார்ப்பது போல எண்ணிப் பார்க்க வேண்டும்! (அப்போதுதான் உடம்பின் புன்மை புலப்படும்.)
. சமண முனிவர்களே அசாத்தியமான கற்பனா சக்தி உங்களுடையது.
விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
கல்ப கோடி காலம் இருண்டு கிண்டந்த ஒரு அறையில் ஒரு தீபம்
விளக்கொளி வர, அங்கே இருந்த இருள்
எங்கே மாயமாக
அக
ன்றது. இது போலவே தான்
ஒருவன் செய்த தவத்தின் முன்னே
அவனது பல ஜன்ம
பாவம் விலகும், விளக்கில் எண்ணெய் குறையும்போது,
தீப ஒளி மங்கி
இருள் பரவுவது போல் நல்வினை
கொஞ்சம் கொஞ்சம்மாக
நீங்
க ஆரம்பித்தால் மீண்டும் பாப்பம் தலை காட்டத் தொடங்கும். பிறகு கெட்டியாக நம்மைப் பிடித்துக் கொள்ளும்.
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச்
சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
பித்தா¢ன் பேதையார் இல்.
ஆதி சங்கரர் நாலடியாரை நிச்சயம் படித்திருக்க மாட்டார். தமிழ் தெரிந்திருக்காது. ஆனால் அவர் சொல்வதை தான் சமண முனிவர்கள் நாலடியாரில் சொல்கிறார்கள். கொஞ்சம் வேறே மாதிரி அவ்வளவுதான்.
யாக்கை
நிலையாமையும், நோயும், மூப்பும், சாவுத் துன்பமும் இவ்வுடம்புக்கு உண்டு என
நிறைய
ஞான
ம் புகட்டும்
நூல்களை ஆய்ந்துணர்ந்த, சிறந்த அறிவுடையோர் தமக்கு உறுதியான தவத்தைச் செய்வர்.
வெறும் உப்பு சப்பற்ற
முடிவில்லாத இலக்கணநூல் என்று சொல்லப்பட்ட பல நூல்களையே விடாமல் சொல்லிக்கொண்டு
''நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே '' ஆசாமிகள் போன்ற
அறிவில்லாதவர் உலகில்
வேறு எங்கும் எவரும்
இல்லை!மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஆஈயுந் தலைமேல் இருத்தலால் அ·தறிவார்
காயும் கதமின்மை நன்று.
பிறர் தம்மை மதிக்கவேண்டும் என்று இரவும் பகலும் அலையும் பல பேர்வழிகளை நாம் பார்க்கிறோம். தான் பேசினால் கைதட்டல் எதிர்பார்ப்போர், தனது புகைப்படம் எல்லா சுவற்றிலும் சிரித்துக்கொண்டே காட்சி தரவேண்டும் என்று பணத்தை வாரி இறைப்பவர்கள் முக்யமாக ஒரு நீதியை அறியவில்லை. பிறர் மதிப்பு என்ன கிரீடம் உன் தலையில் ஏற்றி வைக்கப்போகிறது??
தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்;
கேவலம் ஒரு அல்ப ஜந்துவான ஒரு ஈ கூட ஒரு பெரிய ராஜாவின்
தலைமேல்
தனது காலை வைத்துக்கொண்டு உட்காருகிறது. அதை லட்சியம் செய்கிறானா அவன். அதற்கு மதிப்பு அவ்வளவு தான்.
அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இரு
கிறார்கள் என்று புரிந்து கொள்வோம்.
தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி
அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
முடிகிற்கும் உள்ளத் தவர்.
கெட்ட நேரம் வந்து விட்டால்,
ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாமல் நெருங்கி மிகவும் அவமதிப்பு
நாலா பக்கத்திலிருந்து வருகிறது. நல்ல நேரம் வந்தபோது ஓஹோ என்று வாழ்ந்தோம். இப்போது வேறு நிலைமை. ஆகட்டுமே அதனால் என்ன. வந்தது வரவில் வைப்போம். சென்றதை செலவில் வைப்போம் என்ற மன நிலையோடு எந்த இடர்
வந்த போதிலும், அதற்குக் கலங்காது எடுத்த கா
ரி
யத்தை நிறைவேற்றும் மனவலிமை மிக்கவர்
அறிஞர்கள்.
சிறிதே இடர் கண்டபோதெல்லாம் சினத்தை
வெளிக்காட்டி உயிரையும் சில சமயம் விட்டு அழிபவர்கள் சிறியோர். பொறுத்தார் பூமியாள்வார்.
மனவலிமைமிக்கவர் கண்டதற்கெல்லாம் சினம் கொள்ளாமல் சாந்தமாயிருப்பர். .கோதை யருவிக் குளிர்வரை நன்னாட
பேதையோடு யாதும் உரையற்க - பேதை
உரைப்பிற் சிதைந்துரைக்கும் ஒல்லும் வகையான்
வழுக்கிக் கழிதலே நன்று.
ஹே ராஜாவே,
மாலை போன்ற அருவிகளாலே குளிர்ந்த மலைகளையுடைய மன்னனே! அறிவில்லாதவனோடு எதையும் சொல்லவேண்டாம்! அவனிடம் ஒன்றைச் சொன்னால் அவன் மாறுபட்டுப் பதில் உரைப்பான். ஆதலின் கூடுமானவரை அப்பேதையிடமிருந்து தப்பித்து நீங்குதல் நல்லது.
ராஜாவுக்கு சமண முனிவர்கள் உபதேசம் செய்கிறார்கள். இப்போதெல்லாம் மந்திரிகள் அதிகாரிகள் ராஜாவுக்கு இதை சொல்கிறார்கள். ராஜாக்கள் யார். நாம் தான். மக்களே இந்த நாட்டு மன்னர்கள் அல்லவா? அவர்கள் சொல்லி நமக்கு புரியாவிட்டால் நமக்கு தீங்கில்லை. நமக்கு தான் அவர்கள் சொல்லாமலேயே அனேக தீங்குகள் வரிசையாக அங்கிருந்து வருகின்றனவே.
நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது
தா¡¢த் திருத்தல் தகுதிமற்று - ஓரும்
புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம்
சமழ்மையாக் கொண்டு விடும்.
அவன் கிடக்கிறான் முட்டாள். அவனுக்கு தெரிந்தது அவ்வளவு தான். லட்சியம் பண்ணாதே அவன் சொன்னதை என்று சொல்கிறோமே அது சம்பந்தப் பட்டது இது.
நற்குணமில்லாதவர் பண்பற்ற சொற்களைச் சொல்லும்போது அச்சொற்களைப் பொறுத்துக் கொண்டிருப்பதே தகுதியாகும்! அவற்றைப் பொறுக்காமல் பதில் கூறினால், கடல் சூழ்ந்த உலகம் அதனைப் புகழுக்கு
றி
ய செயலாகக் கொள்ளாது; பழிக்கு
றி
ய செயலாக
த்தான்
கருதும்.
No comments:
Post a Comment